rss
twitter
  Find out what I'm doing, Follow Me :)

Tuesday, February 22, 2011

அழிக்கப்பட உள்ள கட்டிடங்கள்

வீதி அகலிப்பை பற்றிய முன்னைய பதிவை பார்க்க இங்கே சொடுக்கவும்..
வீதி அகலிப்பால் யாழ் நகரில் அழிக்கப்பட உள்ள சில கட்டிடங்கள். இவை முழுமையாக அழிக்கப்படாது. பகுதியாக மட்டுமே அழிக்கப்பட உள்ளன.

சிவன் கோயில் பிரார்த்தனை மண்டபம்
கில்னர் மண்டபம்


சிவதொண்டன் நிலையம்


யாழ். இந்துக்கல்லூரி பிரார்த்தனை மண்டபம்

 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Friday, February 18, 2011

களப்பயணம் 1

எமது பாடசாலையின் இயற்கை அவதானிப்பு கழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட பறவைகளை அவதானிப்பதற்கான களப்பயணம் 1. தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

கவிதை 1

1.   என்னில் பூரணமாய் நீ நிறைந்திருக்கிறாய்.
      என்னில் உனக்கென பெருகும் உணர்வுகளை நான் மட்டுமே அறிவேன்.
     ஆனால் சொற்களில் செயல்களில் என்றுமே
      வெளிவரப் போவதில்லை.
      இத்தனை அன்பையும் என்னுள் தேக்கி 
      உள்ளத்தின் ஆழத்தில் ஊமையாய்   அழுகிறேன்........

2.  பழகி வந்த புதிய முகம் பாதியிலே மறைந்தாலும் 
     எழுதிவைத்த ஓவியம் போல் என்றென்றும் 
     என் நெஞ்சில் நீங்காமல் நீயிருப்பாய்.....

3.  பழகுவது பலபேருடன் புரிவது சிலரைத்தான். 
     புரிந்தே பழகினால் பிரிந்துவிட முடியுமா?????

4.  பலகாலம் காத்திருந்தேன் நீ வருவாயென 
     காத்திருந்து காலம் கரைந்ததே தவிர காலம் கனியவில்லை....

5.  காதல் என்பது தேன்கூடு கட்டுவது என்பது பெரும்பாடு. 
     இருவர் நினைத்தால் கைகூடும்.
     ஒருவர் மறுத்தால் மனம் வாடும்.

6.   என் இனியவளின் முழுமதியால் பொர்ணமியும் அமாவாசையானது.

7.  பெண்ணே உனக்கு மனமில்லையா? 
      ஏன் நோகடிக்கிறாய் ஹைஹீல்ஸால்?????

8.   கண்ணோரம் கண்ணீர் துளிகளோடு கரைந்தது 
      என் காதல் காவியம்.......


 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

Thursday, February 17, 2011

இலங்கையில் நூலகங்கள்

கல்வி என்னும் ஒளிவிளக்கை ஏற்றிவைக்கும் சமுதாயத்தில் அறியாமை என்னும் இருள் விலகிநிற்கும். ஒரு விளக்கிலிருந்து ஓராயிரம் விளக்குகளைக் கூட ஏற்றலாம். அவ்விதமே ஒருவர் பெறும் கல்வியானது அவருக்கு மட்டுமன்றி முழுச்சமூகத்திற்குமே நன்மைகளை விளைவிக்கக் கூடியதாகும். அதனால் தான் 'அன்னசத்திரம் ஆயிரம் கட்டுதலிலும் பார்க்க ஒரு ஏழைக்கு எழுத்தறிவிப்பது உத்தமம்' என்று அறிஞர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். கற்றறிந்தவனுக்கு தன்ஊரில் மட்டுமன்றிச் சென்ற ஊர்களிலெல்லாம் சிறப்புகள் ஏற்படும் என்று திறந்தநிலைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கல்வி என்னும் பெருஞ்செல்வத்தைப் பெறுவதற்காக அக்காலத்திலிருந்து இக்காலம் வரை பல்வேறு சாதனங்களை மனிதன் உருவாக்கியுள்ளான். குகைகளில் வாழ்ந்த மனிதன் இன்று ஏனைய கோள்களிலும் வாழமுடியுமா என்ற ஆராய்ச்சி வரை முன்னேறியுள்ளான். குகைகளில் கோடுகள், குறியீடுகள் எனத் தொடங்கிய எழுத்துப்பயணம் கணனிமொழிகள் வரை பல்வேறு ஊடகங்களினூடாக சென்று கொண்டிருக்கிறது. எண்ணங்களை, அனுபவங்களை, கண்டுபிடிப்புக்களை அடுத்தவருக்கு கூறப்பயன்படுத்திய சாதனங்கள் ஒவ்வொரு காலப்பகுதியிலும் பல்வேறு காரணங்களால் அழிவடையக் கூடியனவாக இருந்தாலும் பெறப்பட்ட அறிவை அடுத்தவருக்கு வழங்கும் செயற்பாடு நின்றுவிடாமல் தொடர்கின்றது.

வரிவடிவக் கல்வி, வாய்மொழிக் கல்வி என்னும் வரிசையில் பல்வேறு சாதனங்கள் கல், களிமண், தோல்கள், பலகைகள், இலைகள், புல்வகைகள், உலோகத்தகடுகள் எனப் பதிவுகளை மேற்கொள்ளப் பயன்பட்டன. அச்சுயற்திரம், காகிதம் என்பவற்றின் கண்டுபிடிப்புகளின் பின் நூல்கள் உருவாகின. இந்நூந்களினூடாக ஒரே சமயத்தில் பலரும் பல இடங்களிலும் அறிவைப் பெறக்கூடிய வாய்ப்பு உருவாகியது. நூல்கள் பெருகப்பெருக அவற்றை பெற்று பயன்படுத்தியவர்கள் அதனை பேணிப் பாதுகாக்கத் தலைப்பட, நூலகங்கள் என்னும் புதிய சிந்தனையும் பிறந்தது. சமயநிறுவனங்கள் தொடங்கி கல்விநிறுவனங்கள் வரை நூலகத்தின் செல்வாக்கு விரிவுபட்டது. கற்பதற்கு நூல்களின் அவசியம் உணரப்பட, கற்பவர் தொகையும் அதிகரிக்க நூல்கள் பலதுறைகளிலும் வெளிவரலாயின. எல்லோருக்கும் எல்லா நூல்களும் கிடைக்க வாய்ப்பிருக்காது. நூல்களின் வியாபகம், பரவல், என்பவற்றுடன் அதன் உற்பத்தி செலவுகளுக்கான விலையும் சம்பந்தப்பட்டுள்ளது. இலவசமாகக் சிடைக்கும் வாய்ப்பிருந்தால் சகலருக்கும் பயன்படும் என்ற நிலை உருவாக நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்புகளினூடாக நூலக சேவைகள் வழங்கப்படும் வழக்கம் மேல்நாடுகளில் ஆரம்பமாகியது.
குருகுலக்கல்வி முறை நிலவிய காலத்திலும் கல்வி கற்பிக்கும் பணிக்காகவே உருவாகியுள்ள கல்வி நிறுவன முறையுடைய இக்காலத்திலும் கற்பித்தலுக்கும் கற்பித்தலுக்குமான ஏடுகள், நூல்கள் என்பன அப்பணியில் ஈடுபடுவோருக்கு எளிதில் கிடைத்தல் வேண்டும். இதற்கான சகல சாத்தியப்பாடுகளையும் உடைய நிறுவங்களாக நூலகங்கள் அமைகின்றன.
  திண்ணைப்பள்ளிகள் மூலமும் குரு-சிஷ;யமுறையிலும் அறிவின் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டாலும் ஒருவன் தானே அவற்றை உள்வாங்கி விருத்தி செய்வதன் ஊடாகவே கல்வியின் பயனைப் பெறமுடியும். இலங்கையில் மேனாட்டாரின் வருகையுடன் அச்சுயந்திரம், கல்விமுறைமைகள், நூல்கள் என்பன அறிமுகமாயின. கல்வி ஒரு சிலரின் சொத்தாகவே விளங்கிய காலகட்டத்தில் மேனாட்டாரின் முயற்சிகள் முழு இலங்கையிலும் கல்வியைப் பெறவேண்டும் என்ற விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. சமயத்தின் ஊடாகவும் சமூகத்தின் பல நிலைப்பட்டவர்களிடையே மேனாட்டாரின் பணிகள் ஊடுருவின.
இனி நாட்டின் தேசிய இனங்களிடையே மேனாட்டவரின் கல்வி நிறுவனங்கள், சமயநிறுவனங்கள் பெரும் புரட்சியை உருவாக்கின. தமது மொழி, சமயம், கலாசாரத்தன்மை இவற்றில் குறுக்கீடு செய்த செயல்களினை ஒரு காலகட்டத்தில் பொறுக்க முடியாதநிலை உருவாகியது. மேனாட்டார் செய்த சமயப் பிரச்சார உத்திகள் கல்விநிறுவன அமைப்புகள் போன்று சுதேச மக்களாகிய அறிஞர்கள், செல்வந்தர்கள், ஆன்மீகவாதிகள் ஆரம்பித்தனர். அவ்வகையில், மேனாட்டாரால் ஆரம்பிக்கப்பட்ட கல்விநிறுவனங்களைப் போன்று சுதேசமக்களும் ஆர்வங் காரணமாகவும், ஆதிக்கத்தைக் குறைக்கும் நோக்கிலும் ஆரம்பித்தனர்.
இதன் மூலம் காலப்போக்கில் 'அனைவருக்கும் கல்வி' என்னும் சாத்தியப்பாடு தோன்றலாயிற்று. அரசாங்கங்களும் காலத்துக்கு காலம் வழங்கிய உதவிகளையும் நன்கொடைகளையும் விரிவுபடுத்தி அரச நிருவாகக் கட்டமைப்புக்களை கல்விசார்ந்து நிறுவலாயிற்று.
கற்றவர் தொகை அதிகரித்ததன் பேரில் நூல்களின் பாவனையும் வாசிப்பு கலாச்சாரமும் மேம்படலாயின. கல்விநிறுவனங்கள், சமயநிறுவனங்கள் மட்டுமன்றி தனிநபர்களும் நூல்களைச் சேகரித்து பாதுகாக்கத் தலைப்பட்டனர். தனிநபர்களின் சேகரிப்புகள் அவர்களுக்கும் அவரது குடும்பத்தவருக்கும் பயன்பட்டன. சிலர் அவர்களிடம் பெற்றுப்பயன்படுத்துவதன் மூலம் வாசிப்பின் அனுபவத்தைப் பெறலாயினர். இதே சமயம் இலங்கையிலும் இந்தியாவிலும் பலவிதமான பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் உருவாயின. நாளாந்தம் நடைபெறும் உலகவிடயங்களை அறிதல் என்பதை நாளாந்தக் கடமையாக்குகின்ற முறை உருவாகியது. உலகயுத்தங்களின் தகவல்கள், நாட்டுக்கு நாடு அபிவிருத்திக்கான சிந்தனைகள் உலகநாடுகளை ஒன்றாக இணைக்கத் துணையாயின.

ஏற்கனவே பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஏனைய கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் நூலகங்கள் அத்துறை சார்ந்தவர்களுக்குப் பயன்பட்டு வந்தன. இலங்கையில் உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக பொதுசன நூலகங்களை அமைக்கத் தலைப்பட்டது.


நன்றி- க.சௌந்தரராஜன்(அனலைதீவு பொது நூலக முன்னாள் நூலகர்)
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......

வரலாறு கண்ணீர் வடிக்கும்..........

இன்று எமது பகுதியில் (யாழ்ப்பாணத்தில்) பாரிய அளவில் முன்னெடுக்கப்படும் செயற்பாடு வீதி அகலிப்பு. அகலிக்க தான் வேண்டும் ஆனால் நகரிற்கும் வாழிடங்களுக்கும் பிரச்சினை ஏற்படாதவாறு செய்யலாமே. அதிலும் முக்கியமாக வரலாற்று முக்கியத்துவம் உள்ள பகுதிகளில் வீதி அகலிப்பை மட்டுப்படுத்துவது நன்மை பயக்கும். எம்மிடம் எஞ்சியருக்கும் வரலாற்று பகுதிகளும் இதன் மூலம் அழிக்கப்பட உள்ளது.
 1. வண்ணார் பண்ணை சிவன் கோவில் பிரார்த்தனை மண்டபம்
 2. சிவத்தொண்டன் நிலையம்
 3. இந்துக்கல்லூரியின் மண்டபம்

இவற்றை விட இடையில் காணப்படும் பண்டைய வீடுகள், தேவாலயங்கள், மடங்கள் அழிக்கப்பட உள்ளன.

வண்ணார் பண்ணை சிவன் கோவில் பிரார்த்தனை மண்டபம்
முன்னைய காலத்திலும் இன்றும் ஆலயம், சந்தை, சந்தி போன்றவற்றை மையமாக கொண்டே குடியிருப்புகள் வளர்ச்சி பெறுகின்றன. முன்பிலிருந்தே சிவன் கோவிலை மையமாக கொண்டே அருகிலுள்ள குடியிருப்புகள், கடைத் தொகுதிகள் உருவாகின. 
இவ்வாலயத்தின் பிரார்த்தனை மண்டபம் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்டதுடன் முஸ்லீம்களின் கட்டட பாணியில் அமைக்கப்பட்ட கோயில் கட்டடம் என்ற பெருமை பெறுகின்றது. அப்பகுதியில் வீதியில் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தி அல்லது கோயில் கோபுரத்தினை பின்னகர்த்தி வழி செய்வதை விடுத்து பிரார்த்தனை மண்டபத்தை அழிப்பது தேவையற்றது. 
உண்மையில் கோபுரம் அண்மைய காலப்பகுதியில் கட்டப்பட்ட ஒன்று. ஏனெனில் முன்னைய சிவன்கோயில் கோபுரம் 1 அடுக்கு மட்டும் கொண்டது. அதை மாற்றி 2000ம் ஆண்டளவில் புதிய கோபுரம் கட்டப்பட்டது. மேலும் இக்கோபுரத்தில் பீப்பாய் குண்டின் தாக்கத்தால் ஏற்பட்ட வெடிப்பு ஒன்று காணப்படுவதாகவும் கேள்விப்பட்டேன். அவ்வாறெனின் கோபுரத்தை இடித்து புதிய கோபுரத்தை சற்று பின்னகர்த்தி பிரார்த்ததை மண்டபத்தை காப்பாற்றுவது ஆலய சபையின் கடமை.

சிவத்தொண்டன் நிலையம்

சிவத்தொண்டன் நிலையம் யோகர் சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்டு உலகம் முழுதும் பிரபல்யமான ஓர் ஆன்மீக நிலையம். ஆப்பகுதியன் புனிதத் தன்மையை உணர்ந்து அப்பகுதி மக்கள் சிவத்தொண்டன் நிலையத்திற்கு முன்னால் தங்கள் பகுதியில் சிறிது விட்டுக்கொடுத்தால் சிவத்தொண்டன் நிலையமும் புனிதத்தன்மையும் பேணப்படும்.


இந்துக்கல்லூரியின் மண்டபம்

ஆறுமுக நாவலரினால் கட்டப்பட்ட இந்துக்கல்லூரியின் மண்டபம் நூற்றாண்டு கடந்தும் அதேநிலையில் பேணப்பட்டு வருகின்றது. ஆறுமுக நாவலரினால் கட்டப்பட்ட இக்கட்டிடம் மட்டுமே அவர் பெயர் சொல்லி நிற்கின்றது. நாவலருடைய வீடு கூட இன்று அழிவடைந்த நிலையிலிருக்கும் போது இக்கட்டடத்தை தொடர்ந்து பேண எம் கடமை.


வீதி அகலிப்பு வேண்டிய ஒன்றுதான். ஆனாலும் அதன்போது வரலாற்று பகுதிகள், பண்டைய வீடுகள் அழிவடையாது காப்பாற்றுவது மக்களின் கடமை. 
ஒரு வரலாற்று ஆர்வாளனாக எனது கருத்து இது. 
உங்கள் கருத்து என்ன????????
 தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய ......