rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Saturday, January 1, 2011

2011 வித்தியாசமான ஆண்டு

இன்று பிறக்கும் 2011-ம் ஆண்டில், ஒரு தேதியை மாதம் மற்றும் வருடத்துடன் இணைத்து எழுதினால், அதில் ஒன்று என்ற இலக்கம் மட்டும் 6 முறை இடம் பெறுகிறது.  அதாவது, இந்த ஆண்டில் நவம்பர் மாதம் 11-ந் தேதியை, 11-11-11 என்று எழுதும்போது 6 முறை ஒன்று என்ற இலக்கம் இடம் பெறுவதை காணலாம்.  அதேபோல், இந்த ஆண்டில் 4 தேதிகளில் ஒன்று என்ற இலக்கம் மட்டுமே இடம் பெறுவது மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
ஆண்டின் முதல் நாளே அந்த சிறப்பைப் பெற்று உள்ளது. அதாவது, 1-ம் தேதியான இன்று 1-1-11 ஆகும்.  அதேபோல் ஜனவரி 11-ந் தேதி, 11-1-11 என்றும், நவம்பர் 1-ந் தேதியன்று, 1-11-11 என்றும், நவம்பர் 11-ந் தேதி அன்று 11-11-11 என்றும், முற்றிலும் ஒன்று என்ற இலக்கமே இடம் பெறுவதைக் காணலாம்.
ஏற்கனவே கடந்த 1911-ல் வந்ததுபோல், 100 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 2011-ல்தான் இது போன்று அமைவதால், இந்த நூற்றாண்டின் வித்தியாசமான ஆண்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.





Thanks to- www.tamilcnn.com  தமிழ்10  - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் ,  இன்னும் நிறைய ......

0 comments: